/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை கழிவு எரிப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு
/
தொழிற்சாலை கழிவு எரிப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : நவ 22, 2025 01:12 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, கொளத்துார் ஊராட்சி மயானம் அருகே, மர்ம நபர்கள் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில், 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை, அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலையோரங்களிலும், நீர்நிலைப்பகுதிகளிலும் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர்.
அதில் வெளியேறும் புகையால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறுகிறது. இதனால், சுவாசக்கோளாறு, மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னையால் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர்.
சாலையோரத்தில் தொழிற்சாலை கழிவுகள் எரிப்பதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதோடு, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தொழிற்சாலை கழிவுகளை கொட்டி எரிக்கும், மர்ம நபர்கள் மீது , போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

