/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவல் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா
/
காவல் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக மைதானத்தில், மாவட்ட காவல் துறை சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.
இதில், மாவட்ட எஸ்.பி., சண்முகம் பங்கேற்றார். அனைத்து சமயத்தினரும் பங்கேற்று, பொங்கல் வைத்து, கொண்டாடினர். போலீசார் கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
வெற்றி பெற்றோருக்கு மாவட்ட எஸ்.பி., சண்முகம் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில், கூடுதல் எஸ்.பி.,க்கள் வெள்ளத்துரை, சார்லஸ் சாம் ராஜதுரை, டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர், பல்வேறு நிலைகளில் பணியாற்றும் போலீசார் என பலரும் பங்கேற்றனர்.