/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வைப்பூருக்கு ரூ.5 லட்சத்தில் எரிமேடை
/
வைப்பூருக்கு ரூ.5 லட்சத்தில் எரிமேடை
ADDED : நவ 09, 2024 12:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை, வைப்பூர் சித்தேரி அருகே திறந்தவெளியில் வைத்து எரியூட்டி தகனம் செய்து வருகின்றனர்.
இதனால், மழை காலங்களில் இறந்தவர்களின் உடலை எரியூட்டுதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே, தங்கள் பகுதிக்கு மயான எரிமேடை அமைத்து தர வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், வைப்பூர் கிராமத்தில் மாயான எரிமேடை அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.