/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.ஐ.டி., விளையாட்டு திருவிழா கூடைப்பந்தில் எத்திராஜ் சாம்பியன்
/
ஐ.ஐ.டி., விளையாட்டு திருவிழா கூடைப்பந்தில் எத்திராஜ் சாம்பியன்
ஐ.ஐ.டி., விளையாட்டு திருவிழா கூடைப்பந்தில் எத்திராஜ் சாம்பியன்
ஐ.ஐ.டி., விளையாட்டு திருவிழா கூடைப்பந்தில் எத்திராஜ் சாம்பியன்
ADDED : அக் 01, 2024 06:16 AM

சென்னை : சென்னை, கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., சார்பில், 'விளையாட்டு திருவிழா' எனும் பெயரில், ஆண்டுதோறும் கல்லுாரிகள் இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நடப்பு ஆண்டுக்கான போட்டிகள், கடந்த 23ல் துவங்கின. தடகளம், கூடைப்பந்து, சதுரங்கம், கால்பந்து, ஹாக்கி உட்பட பல போட்டிகளில், 60க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 1,000 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு, எத்திராஜ் கல்லுாரி அணியும், ஐ.ஐ.டி., அணியும் முன்னேறியது.
போட்டியின் துவக்கம் முதலே, எத்திராஜ் வீராங்கனையர் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், ஆட்ட நேர இறுதியில் 63 -- 28 என்ற புள்ளிக்கணக்கில், எளிதாக வெற்றியை சுவைத்த எத்திராஜ் கல்லுாரி வீராங்கனையர், சாம்பியன் கோப்பையை வென்று அசத்தினர்.
மூன்றாம் இடத்தை சென்னை கிறிஸ்துவ கல்லுாரி அணியும், நான்காம் இடத்தை வி.ஐ.டி., பல்கலை அணியும் பிடித்தன.