/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 13ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
/
காஞ்சியில் வரும் 13ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
காஞ்சியில் வரும் 13ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
காஞ்சியில் வரும் 13ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 03, 2025 07:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் வரும் 13ம் தேதி, முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 13ம் தேதி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், படைவீரர்கள் மற்றும் படைவீரரை இழந்த மனைவி பங்கேற்கலாம்.
படைவீரர்களுக்கு உள்ள கோரிக்கைகள், புகார் பற்றி இம்முகாமில், தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.