/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழந்தை இல்லம் நடத்துவோருக்கு 'முன்மாதிரி சேவை விருது'
/
குழந்தை இல்லம் நடத்துவோருக்கு 'முன்மாதிரி சேவை விருது'
குழந்தை இல்லம் நடத்துவோருக்கு 'முன்மாதிரி சேவை விருது'
குழந்தை இல்லம் நடத்துவோருக்கு 'முன்மாதிரி சேவை விருது'
ADDED : ஜூலை 26, 2025 09:06 PM
காஞ்சிபுரம்:குழந்தை இல்லங்களுக்கு முன்மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளதால், குழந்தைகள் இல்லம் நடத்தும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு, “முன்மாதிரியான சேவை விருதுகள்” வழங்கப்பட உள்ளன.
இவ்விருதுகள் வழங்குவதற்கு தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்ந்து ஐந்து ஆண்டு காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
இந்த விருதுக்காக வரவேற்கப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், கருத்துருக்களை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள், காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.