/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலை உணவு திட்டம் விரிவாக்கம் 2,370 மாணவ - மாணவியர் பயன்
/
காலை உணவு திட்டம் விரிவாக்கம் 2,370 மாணவ - மாணவியர் பயன்
காலை உணவு திட்டம் விரிவாக்கம் 2,370 மாணவ - மாணவியர் பயன்
காலை உணவு திட்டம் விரிவாக்கம் 2,370 மாணவ - மாணவியர் பயன்
ADDED : ஆக 27, 2025 02:36 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை, கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2022ல், 1 - 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில், ஐந்து நாட்களிலும் வெவ்வேறு வகையான சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 484 அரசு பள்ளிகளில் உள்ள 28,525 மாணவ - மாணவியர், 33 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1,901 மாணவ - மாணவியர் இத்திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் பள்ளியில் நேற்று காலை உணவு விரிவாக்க திட்டத்தை கலெக்டர் கலைச்செல்வி பங்கேற்று துவக்கினார்.
இதில், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். மாணவியருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.
காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட எட்டு பேரூராட்சி பகுதியில் உள்ள எட்டு பள்ளிகளிலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10 பள்ளிகளிலும், குன்றத்துார் மற்றும் மாங்காடு நகராட்சியைச் சார்ந்த இரண்டு பள்ளிகளிலும் மொத்தம் 20 பள்ளிகளில் 2,370 மாணவ - மாணவியர் இத்திட்டம் மூலம் பயனடைவர்.

