/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாணவியருக்கு 'டெபிட் கார்டு' வழங்கல்
/
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாணவியருக்கு 'டெபிட் கார்டு' வழங்கல்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாணவியருக்கு 'டெபிட் கார்டு' வழங்கல்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் மாணவியருக்கு 'டெபிட் கார்டு' வழங்கல்
ADDED : டிச 31, 2024 01:37 AM

காஞ்சிபுரம், டிதுாத்துக்குடி மாவட்டத்தில், புதுமைப்பெண் விரிவாக்க திட்ட நிகழ்ச்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், புதுமைப்பெண் விரிவாக்கம் திட்ட நிகழ்வில், கைத்தறி துறை அமைச்சர்காந்தி பங்கேற்று, மாணவியருக்கு, 'டெபிட் கார்டு'களை வழங்கினார்.
உயர்கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியரின் சேர்க்கை விகிதம்மிக குறைவாக இருப்பதை உணர்ந்து, தமிழக அரசு மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
கடந்த 2022 முதல் தற்போது வரை புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், 7,777 மாணவியருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் என, மொத்தம் 20.99 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், 2024 ஆகஸ்ட் முதல்தற்போது வரை, 8,599 மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா, 1,000 ரூபாய் என, மொத்தம் 4.30 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 310 கல்லுாரி மாணவியருக்கு, டெபிட் அட்டைகள் வழங்கப் பட்டன.
இந்நிகழ்வில், கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சி புரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், சமூக நல அலுவலர் சியாமளா, மேயர் மகாலட்சுமி, சப் - கலெக்டர் ஆஷிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.