/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் கால்வாய் அமைக்க செவிலிமேடில் எதிர்பார்ப்பு
/
கான்கிரீட் கால்வாய் அமைக்க செவிலிமேடில் எதிர்பார்ப்பு
கான்கிரீட் கால்வாய் அமைக்க செவிலிமேடில் எதிர்பார்ப்பு
கான்கிரீட் கால்வாய் அமைக்க செவிலிமேடில் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 13, 2025 12:34 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு ஜெம் நகர் பிரதான சாலையில், பூங்கா, கிராம நிர்வாக அலுவலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்காமல், மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மண் கால்வாயாக இருப்பதால், கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, கால்வாய் அடிக்கடி துார்ந்து விடுகிறது. மழைக்காலத்தில், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்து விடுவதால், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அடிக்கடி கால்வாயை துார்வார வேண்டிய நிலை உள்ளது.
எனவே, செவிலிமேடு ஜெம் நகர் பிரதான சாலையில், மழைநீர் வெளியேறும் மண் கால்வாயை, கான்கிரீட் கால்வாயாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.