/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 07, 2025 06:53 AM
வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம் தொள்ளாழி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி வாசிகளின் குடிநீர் தேவைக்கு, கொசப்பட்டு ஏரி அருகே ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் வாயிலாக தொள்ளாழியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தொள்ளாழி காலனி, மாரியம்மன் கோவில் தெருவில்பயன்பாட்டில் உள்ள 60,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட டேங்க், தற்போது மிகவும் பழுதடைந்து சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து காணப்படுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து பலவீனமாக உள்ளது. பழுதான டேங்க் அருகே தொடக்கப் பள்ளி, நுாலகம் மற்றும் அங்கன்வாடி மையம் போன்றவை உள்ளதால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும்இருந்தபடி உள்ளது.
இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியால்,பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என, அப்பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர்.
எனவே, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

