/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில் நிலைய மேம்பாலம் அருகே ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
/
ரயில் நிலைய மேம்பாலம் அருகே ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
ரயில் நிலைய மேம்பாலம் அருகே ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
ரயில் நிலைய மேம்பாலம் அருகே ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2025 10:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம், கடந்த 2022ம் ஆண்டு திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதிய ரயில்வே மேம்பாலத்திற்கு செல்லும் அணுகுசாலையை ஒட்டி, காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை மற்றும் ஜவஹர்லால் நேரு சாலை உள்ளது.
இதனால், ஜவஹர்லால் நேரு சாலையில் இருந்து, புதிய ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக, மேம்பாலத்தின் இணைப்பு சாலையை கடக்கும்போது, மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், பொன்னேரிக்கரை புதிய ரயில்வே மேம்பால சந்திப்பு அணுகுசாலையில், ரவுண்டானா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.