/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் மருந்தம் அமைக்க டிச., 10 வரை நீட்டிப்பு
/
முதல்வர் மருந்தம் அமைக்க டிச., 10 வரை நீட்டிப்பு
ADDED : டிச 06, 2024 08:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக டிச., 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, டிச., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க, 110 சதுர அடிக்கு குறையாமல் வாடகை அல்லது சொந்த கட்டடம் இருக்க வேண்டும்.
அதற்குரிய, சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது மற்றும் வாடகை கட்டடத்திற்கு உரிமையாளரின் ஒப்பந்த பத்திரம் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, அரசு மானியமாக 3 லட்சம் ரூபாயை இரு தவணைகளாக ரொக்கம் மற்றும் மருந்துகளாக வழங்கும். மேலும், கூடுதல் நிதி தேவைப்படும் போது, கூட்டுறவு வங்கி வாயிலாக கடன் வழங்கப்படும் என, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.