/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண் மருத்துவ முகாம் 197 பேருக்கு பரிசோதனை
/
கண் மருத்துவ முகாம் 197 பேருக்கு பரிசோதனை
ADDED : ஏப் 09, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை பிரிவின், எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி பைசர் மருத்துவர்கள் குழு மற்றும் காஞ்சிபுரம் டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
முகாமில், பங்கேற்ற 197 பேருக்கும், கிட்ட பார்வை, தூர பார்வை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் அழுத்தம், விழித்திரை பரிசோதனை, கண் புரை, கிளைக்கோமா உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 185 பேர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 12 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.