ADDED : செப் 09, 2025 10:14 PM
காஞ்சிபுரம்:தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோஷிதா நளினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய மருத்துவ சங்க தலைவர் ரவி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்த வங்கி அதிகாரி கல்பனா, கண் மருத்துவர் அனந்தலட்சுமி ஆகியோர் கண்தானம் குறித்து பேசினர்.
சங்கவி மற்றும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணி அரசு மருத்துவமனையில் துவங்கி, முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையில் நிறைவு பெற்றது.