/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழிப்பறையில் மயங்கி விழுந்த தொழிற்சாலை காவலாளி பலி
/
கழிப்பறையில் மயங்கி விழுந்த தொழிற்சாலை காவலாளி பலி
கழிப்பறையில் மயங்கி விழுந்த தொழிற்சாலை காவலாளி பலி
கழிப்பறையில் மயங்கி விழுந்த தொழிற்சாலை காவலாளி பலி
ADDED : ஜூலை 17, 2025 09:39 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியார் தொழிற்சாலை கழிப்பறையில் மயங்கி விழுந்த காவலாளி உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதிர், 33; ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அப்துல் காதிர், நேற்று முன்தினம் மாலை, தொழிற்சாலையில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது, திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறப்பு குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.