/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் போலி மருத்துவர் சிக்கினார்
/
காஞ்சிபுரத்தில் போலி மருத்துவர் சிக்கினார்
ADDED : ஜன 31, 2024 12:35 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், சர்வதீர்த்தக்குளம் பிரதான சாலையில், முறையாக மருத்துவம் படிக்காத திருமலை, 45, என்பவர், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக, முதல்வர் தனிப்பிரிவுக்கு அப்பகுதியில் வசிப்போர் ஏற்கனவே புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், சுகாதாரத் துறை இணை இயக்குனர் கோபிநாத், சர்வதீர்த்தக்குளம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார், அப்போது, திருமலை என்பவர் மருத்துவம் படிக்காமலேயே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது
இதையடுத்து, அவர் மீது, போலீசில் இணை இயக்குனர் கோபிநாத் புகார் அளித்தார். திருமலையை கைது செய்து சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.