/
புகார் பெட்டி
/
காஞ்சிபுரம்
/
சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியால் விபத்து அபாயம்
/
சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியால் விபத்து அபாயம்
சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியால் விபத்து அபாயம்
சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியால் விபத்து அபாயம்
ADDED : டிச 18, 2025 06:15 AM

ஸ்ரீ பெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே, ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவிற்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஒரகடம் அருகே, மாத்துார் துணை மின் நிலையம் சந்திப்பில், அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையின் இருபுறமும், தடுப்பு கம்பிகள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில், ஸ்ரீபெரும்புதுார் - ஒரகடம் மார்க்கமாக உள்ள பேரிகேட், சாலையில் விழுந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும், இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்தில் சிக்கி, காயம் அடைந்து வருகின்றனர்.
எனவே, சாலையில் விழுந்துள்ள தடுப்பு கம்பியை முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- த. மனோகரன், மாத்துார்.

