தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ முறிந்து விழுந்துள்ள மரக்கிளைகளால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு

 முறிந்து விழுந்துள்ள மரக்கிளைகளால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு

 முறிந்து விழுந்துள்ள மரக்கிளைகளால் வாகன போக்குவரத்திற்கு இடையூறு


ADDED : ஜூன் 04, 2026 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருப்பரு த்திகுன்றம் செல்லும் சாலையோரம், இரு வாரங்களுக்கு முன், சூறவாளி காற்றுக்கு முறிந்த விழுந்த மரக்கிளைகளை அகற்றாததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அய்யப்பா நகர், திருப்பருத்திகுன்றம் பிரதான சாலை வழியாக பிள்ளையார்பாளையம், குண்டுகுளம், கீழ்கதிர்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இரு வாரங்களுக்கு முன் சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது, திருப்பருத்திகுன்றம் பிரதான சாலையோரம், உள்ள புங்கை மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன.

சாலையில் விழுந்த மரக்கிளைகளை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றாததால், சாலையின் அகலம் குறைந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, திருப்பருத்திகுன்றம் பிரதான சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us