/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலவை இயந்திர துாசியால் கீழம்பி விவசாயிகள் பாதிப்பு
/
கலவை இயந்திர துாசியால் கீழம்பி விவசாயிகள் பாதிப்பு
கலவை இயந்திர துாசியால் கீழம்பி விவசாயிகள் பாதிப்பு
கலவை இயந்திர துாசியால் கீழம்பி விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 23, 2024 05:37 AM

காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழி சாலையாகவும், 18 இடங்களில், சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இதில், பாலுச்செட்டிசத்திரம், திருப்புட்குழி, ஆரியபெரும்பாக்கம் ஆகிய பிரதான கடவுப்பாதைகளில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக கீழம்பியில், சிமென்ட் ஜல்லி கலவை இயந்திரம் வாயிலாக சுத்தப்படுத்தப்படுகிறது. ஜல்லி, கல் துகள்கள் பறப்பதால், விவசாயம் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, ராட்சத இயந்திரங்கள் ஓடும் போது, ஜல்லி துாசுகள், நெற்பயிர், காய்கறிகள், வாழை உள்ளிட்ட விளைப் பொருட்களின் மீது விழுந்து, நாசமடைந்து வருகின்றன.
இதுகுறித்து, கீழம்பி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
சாலை போடும் பணிக்கு, ஜல்லி கலவை தயாரிக்கும் இயந்திரத்தில் இருந்து வெளியேறும் துாசியினால் நெல், காய்கறி, பழங்கள் மீது துாசு படியும் போது, விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு கலெக்டரிடம் புகார் மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால், நெல் பயிரிட முடியாமல் தரிசாக போட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.