/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'வறண்ட பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு
/
'வறண்ட பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு
'வறண்ட பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு
'வறண்ட பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு
ADDED : செப் 21, 2024 01:37 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நடந்தது.
இக்கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அனைத்து துறை அதிகாரிகள் என, வேளாண் துறை சார்பில், விவசாயிகளுக்கு 1.5 கோடி ரூபாயில் கடனுதவி வழங்கப்பட்டது.
களக்காட்டூர் கூட்டுறவு சங்கத்தின் மூலம், ஐந்து விவசாயிகளுக்கு, 5.4 லட்சத்தில் பயிர்க்கடன்களும், விப்பேடு கூட்டுறவு சங்கம் மூலம், 1.8 லட்சமும், 40 லட்சம் மதிப்பிலான டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவை விவசாய பயனாளிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
இக்கூட்டத்தில், 'ஏரி பாசன சங்க தேர்தல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடத்துவதை நிறுத்தி, முறையாக தேர்தல் நடத்த வேண்டும்' என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், 'வறண்ட பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி, கோட்டம் வாரியாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்' என, விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.