/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தத்காலில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
தத்காலில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தத்காலில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தத்காலில் மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 21, 2025 04:25 AM
காஞ்சிபுரம்: தத்கால் முறையில், விவசாய மின் இணைப்பு பெற, விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:
வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில், 2025 - 26ம் நிதியாண்டிற்கு அரசு சிறப்பு திட்டங்கள், தத்கால் என, அழைக்கப்படும் புதிய சுயநிதி திட்டங்களின் கீழ், புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தத்கால் முறையில், மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், இணைய தளம் முடக்கப்பட்டு உள்ளது. இதனால், பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்தது.
விண்ணப்பிக்கும் காலம் நிறைவு பெற்று விட்டது என, அச்சப்படத் தேவையில்லை.
தத்காலில் மின் இணைப்பு பெற டிச.,31 வரையில், அந்தந்த கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், விவசாயிகள் அசல் ஆவணங்கள் வழங்கி, மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

