/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை மருந்தகம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
கால்நடை மருந்தகம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 20, 2024 09:05 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியில் புதுார், கூத்திரமேடு, அருந்ததியர்பாளையம், மேல்ஒட்டிவாக்கம் காலனி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பு வாயிலாக வருமானம் ஈட்டி வருகின்றனர். கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருவாய், விவசாயிகளின் முக்கிய வருமானமாக உள்ளது.
இப்பகுதி கால்நடைகளுக்கு கோமாரி நோய், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும்போது, சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருந்தக வசதி இல்லை.
இதனால், 3 கிலோமீட்டர் துாரமுள்ள பாலுச்செட்டிச்சத்திரம் கால்நடை மருத்துவமனைக்கு விவசாயிகள் தங்களது கால்நடைகளை ஓட்டிச்செல்கின்றனர்.
ஆனால், இம்மருத்துவமனை செல்வதற்கு, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதனால், கால்நடைகளை ஓட்டிச்செல்லும்போது, நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கால்நடைகள், விவசாயிகள் மீது மோதுவதால் விபத்து ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, மேல்ஒட்டிவாக்கம் ஊராட்சியில் புதிய கால்நடை மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.