/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பி.எம்.,கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை விவசாயிகளுக்கு அவகாசம்
/
பி.எம்.,கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை விவசாயிகளுக்கு அவகாசம்
பி.எம்.,கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை விவசாயிகளுக்கு அவகாசம்
பி.எம்.,கிசான் திட்டத்தில் பதிவு செய்ய மே 31 வரை விவசாயிகளுக்கு அவகாசம்
ADDED : மே 17, 2025 08:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பி.எம்.கிசான் திட்டத்தில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாய குடும்பங்களுக்கு விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகளின் நில ஆவணங்கள் பதிவேற்றம், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் மற்றும் விவசாயி நில உடைமை பதிவு ஆகிய பணிகளை முடித்திருக்க வேண்டும்.
இப்பணிகளை முடிப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது.
இம்முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,844 பயனாளிகள் இ - கே.ஒய்.சி.,எனப்படும் ஆதார், பான் எண் போன்ற விபரங்களை பதிவேற்றம், 1,152 பயனாளிகள் ஆதார் எண்ணுடன், வங்கிக் கணக்கு இணைக்காமலும், 213 பயனாளிகள் நில ஆவணங்கள் பதிவேற்றாமலும், 5,424 பயனாளிகள் நில உடைமைக்கான பதிவு முடிக்காமலும் உள்ளனர்.
இப்பணிகளை முறையாக முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் உதவித்தொகை தொடர்ந்து பெற முடியும்.
எனவே, அனைத்து விவசாயிகளும் மேற்கூறிய பணிகளில் ஏதேனும் முடிக்காமல் இருந்தார்ல், பி.எம்.கிசான் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று, ஆவண விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்