/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் நாற்று உற்பத்தியில் விவசாயிகள் தீவிரம்
/
நெல் நாற்று உற்பத்தியில் விவசாயிகள் தீவிரம்
ADDED : நவ 27, 2024 11:05 PM

வாலாஜாபாத்:சம்பா பட்ட நெல் சாகுபடிக்கு, விவசாயிகள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், நெல் விதைகள் பதியம் செய்வது வழக்கம்.
அதை தொடர்ந்து, 30 நாட்களுக்கு மேல் வளர்ந்த நெல் நாற்றுகளை பிடுங்கி, இடம் மாற்றி விவசாய நிலங்களில் நடவு செய்வர். இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது.
இதையடுத்து, வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு, சின்னிவாக்கம், புத்தாகரம், கரூர் உள்ளிட்ட பல பகுதிகளில், சில தினங்களுக்கு முன் சம்பா பருவ சாகுபடி பணிக்காக விவசாயிகள் நெல் நாற்றுக்கு விதைகள் பதியம் செய்துள்ளனர்.
தற்போது, அந்நாற்றுகள் நன்கு செழிமையாக வளர்ந்துள்ளன. மேலும், பருவ மழையும், இரு நாட்களாக தீவிரம் அடைந்துள்ளதால், அடுத்த சில தினங்களில் நடவு பணிகள் மேற்கொள்ள தயாராகி வருவதாக தென்னேரி, புத்தகரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.