ADDED : பிப் 19, 2025 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 28ல், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:30 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.