/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படப்பை அருகே நாளை உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டம்
/
படப்பை அருகே நாளை உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டம்
ADDED : பிப் 15, 2024 09:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொள்முதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புகள், மொத்த விற்பனையாளர்கள், கொள்முதல் செய்து சுத்திகரிப்பு செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள், ஹோட்டல் நிறுவனங்கள் ஆகியோருக்கான கலந்துரையாடல் கூட்டம், படப்பை அருகில் உள்ள ராசி பொறியியல் கல்லுாரியில், நாளை நடைபெற உள்ளது.
இக்கூட்டம் வாயிலாக, மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்தி தர, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாளை நடைபெறும் இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர் கலந்து கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தகவல்களுக்கு, மகளிர் திட்ட அதிகாரிகளை, 94440 94281 மற்றும் 94440 94282 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.