/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எச்சூரில் நில எடுப்புக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மனு
/
எச்சூரில் நில எடுப்புக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மனு
எச்சூரில் நில எடுப்புக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மனு
எச்சூரில் நில எடுப்புக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மனு
ADDED : அக் 07, 2025 11:17 PM
காஞ்சிபுரம்:எச்சூர் கிராமத்தில், சிப்காட் விரிவாக்க பணிக்காக, நில எடுப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, எச்சூர் கிராம விவசாயிகள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் விரிவாக்க பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட எச்சூர் கிராம ஊராட்சியில் உள்ள வேளாண் நிலங்களை நில எடுப்பு செய்வது சம்பந்தமாக, வருவாய் துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
எச்சூர் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேலாக நிலங்கள் கையகப்படுத்த போவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
நில எடுப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, எச்சூர் கிராம விவசாயிகள், காஞ்சிபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர்.
எச்சூர் ஊராட்சி அலுவலகத்தில், சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலுடன் வந்த கிராம மக்கள், காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்க முயன்றனர்.
ஆனால், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி இல்லாததால், நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனர். கலெக்டர் அறை அருகே 50க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.