/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
/
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
கிளக்காடி ஏரிக்கால்வாயில் சிறுபாலமின்றி விவசாயிகள் அவதி
ADDED : டிச 12, 2025 05:49 AM

உத்திரமேரூர்: கிளக்காடி, சித்தேரி கால்வாயில் சிறுபாலம் வசதி இல்லாததால் கால்வாயை கடந்து, தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்றுவர முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான சித்தேரி உள்ளது.
மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பி வெளியேறக்கூடிய உபரி நீர், ஏரியில் இருந்து செல்லும் கால்வாய் வழியாக குமாரவாடி மற்றும் புக்கத்துறை உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்கிறது.
மழைக்காலத்தில் இந்த கால்வாய் வாயிலாக தண்ணீர் செல்லும் சமயங்களில் கால்வாயை கடந்து, தங்கள் நிலங்களுக்கு செல்வதில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கு டிராக்டர், மாட்டு வண்டி, டில்லர் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் போன்றவற்றை நிலப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப் படுகின்றனர்.
இதுகுறித்து அப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
இக்கால்வாயின் குறுக்கே சிறுபாலம் அமைத்து, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு, போக்குவரத்து வசதி ஏற் படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

