/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆற்றில் சாய்ந்துள்ள மின்கம்பம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
ஆற்றில் சாய்ந்துள்ள மின்கம்பம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆற்றில் சாய்ந்துள்ள மின்கம்பம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஆற்றில் சாய்ந்துள்ள மின்கம்பம் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 09, 2025 02:53 AM

மேல்ஒட்டிவாக்கம்: மேல்ஒட்டிவாக்கம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், விபத்து ஏற்படும் முன், ஆற்றுக்குள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழையால், காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேல் ஒட்டிவாக்கம் வழியாக செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, விவசாய நிலங்களுக்கு தேவையான மின் இணைப்பு வழங்க, ஆற்றின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம், வெள்ள நீரால் சாய்ந்துள்ளது.
ஆற்றில் தொடர்ந்து வெள்ளநீர் செல்வதால் மண் அரிப்பு ஏற்பட்டு, மின்கம்பம் சாய்ந்து விழுந்து, விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை, மின்வாரியத்தினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, மேல்ஒட்டிவாக்கம் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.