/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 27, 2025 08:22 PM
காஞ்சிபுரம்:விவசாயிகள், வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,380 கிராமங்கள் பயிர் காப்பீடு செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், ஜூலை- 31ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு, 726 ரூபாய் பிரீமியம் தொகை செலுத்தி, பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
முன் மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் பயிர் காப்பீடுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, சாகுபடி செய்த கிராமத்தின் பெயர், புல எண்கள், சாகுபடி பரப்புகள் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து காப்பீடு செய்த பின், முறையாக ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருக்கும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.