ADDED : மார் 02, 2026 05:01 AM
மாமல்லபுரம்: சென்னை பெரவள்ளூரை சேர்ந்த மோகன் ராஜ் மகன் பிரதீப், 35. பெயின்டர்; மனைவி பிரீத்தி, 28. மகள்கள் லியா, 7, சுபிக் ஷா, 4. மனைவி, வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கணவர் கண்டித்ததால், கணவரையும், மகள்களையும் விட்டு, மனைவி பி ரிந்து, மூன்று மாதங்களாக பெற்றோருடன் வசித்தார்.
இந்நிலையில் கடந்த பிப்., 12ம் தேதி பிரதீப் மகள்களுடன் மாமல்லபுரம் தனியார் விடுதியில் தங்கினார். 14ம் தேதி மகள்களை கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்றார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குளியலறை பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மகள்களை மூழ்கடித்து கொன்றதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.
மாமல்லபுரம் போலீசில், அவரது மனைவி புகார் அளித்த நிலையில், பிரதீப் மீது கொலை வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
