/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பைக் மீது லாரி மோதி தந்தை, மகள் உயிரிழப்பு
/
பைக் மீது லாரி மோதி தந்தை, மகள் உயிரிழப்பு
ADDED : ஏப் 25, 2025 01:26 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 46, அரசு போக்குவரத்து கழக உத்திரமேரூர் பணிமனையில் ஓட்டுநராக இருந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு, தன் மகள் துளசி, 16 உடன் ஹீரோ பேஷன் பிளஸ் இரு சக்கர வாகனத்தில், உத்திரமேரூருக்கு சென்று விட்டு திரும்பினர்.
உத்திரமேரூர் -- மானாம்பதி நெடுஞ்சாலையில் உள்ள, வேடபாளையம் பகுதியில் வரும்போது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், தந்தை மகள் இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.