/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான மின்கம்பம் படப்பையில் அச்சம்
/
சேதமான மின்கம்பம் படப்பையில் அச்சம்
ADDED : செப் 24, 2024 07:54 AM

படப்பை: குன்றத்துார் ஒன்றியம் படப்பை ஊராட்சியில் இருந்து ஒரத்துார் ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை படப்பை, ஆதனஞ்சேரி, ஒரத்துார், நீலமங்கலம், அமணம்பாக்கம், நாட்டரசன்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையோரம்ஆதனஞ்சேரி முதல்ஒரத்துார் வரை, 10 மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. கம்பத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகள்உதிர்ந்து, கட்டுமானகம்பிகள் வெளியேதெரிகின்றன.
உயர் மின்னழுத்த ஒயர்களை தாங்கி பிடிக்கும் இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால், பெரும் அசம்பாவிதங்கள்ஏற்படும் அபாயம்உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன், இந்த சாலையில் சேதமான மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.