/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால் அச்சம்
/
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால் அச்சம்
ADDED : ஆக 04, 2025 11:35 PM

உத்திரமேரூர் உத்திரமேரூர் பேரூராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் அச்சமடையும் பகுதிமக்கள், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், குறைந்தது 10 நாய்கள் சுற்றித் திரிகின்றன.
அதி லும் நல்லுார், நீரடி ஆகிய கிராம பகுதிகளில் அதிகளவில் நாய்கள் தொல்லை உள்ளது. கூட்டமாக திரியும் நாய்களால், நடந்து செல்லவே பகுதிமக்கள் அச்சப்படுகின்றனர். தவிர, சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, உத்திரமேரூர் பேரூராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடு க்க வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

