/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் இறந்த போலீஸ் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய சக போலீஸ்காரர்கள்

ADDED : பிப் 13, 2024 04:26 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை போலீஸ்காரர் இளங்கோ என்பவர், கடந்தாண்டு நவம்பர் மாதம், சாலை விபத்தில் இறந்தார்.
இவருடைய குடும்ப வருமானம், பெரும் பங்களிப்பாக இருந்த நிலையில், இளங்கோவின் இறப்பால் பொருளாதார இழப்பாக அவரது குடும்பத்துக்கு மாறியது.
எனவே, இவருடன், 2017ல் பணியில் சேர்ந்த போலீசார் அனைவரும், காக்கும் கரங்கள் என்ற குழுவை உருவாக்கி, இளங்கோ குடும்பத்திற்கு உதவி செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, தமிழகம் முழுதும் 6,400 போலீசார் இணைந்து, தங்கள் பங்களிப்பாக அளித்த, 20 லட்சத்து, 74 ஆயிரம் ரூபாயை அவரது குடும்பத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி.,சண்முகம் முன்னிலையில் நேற்று வழங்கினர்.
இந்த நிதியுதவியை, அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் பெற்றுக் கொண்டனர்.