/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கோவிலில் சினிமா ஷூட்டிங்
/
காஞ்சி கோவிலில் சினிமா ஷூட்டிங்
ADDED : ஜன 08, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி, ஜுரகேஸ்வரர் கோவில், மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இங்கு, நடிகை நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் நேற்று காலை படமாக்கப்பட்டன.
இதற்காக, நடிகை நயன்தாரா வந்ததால், கோவில் அருகே ஏராளமானோர் கூடினர். இதனால், அப்பகுதியில் காலை 10:00 மணி முதல் பரபரப்பு காணப்பட்டது.
கூட்டம் கூடியதால், போக்குவரத்து சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சினிமா படபிடிப்பு நடத்தியதால், கோவில் வாசல் மூடப்பட்டது. இதனால், பக்தர்களால் தரிசனம் செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது.