/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பிரிஜ்'ஜில் மின்கசிவால் தீ விபத்து
/
'பிரிஜ்'ஜில் மின்கசிவால் தீ விபத்து
ADDED : அக் 09, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:திருமுடிவாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், 32. ஓட்டுநர். அவரது மனைவி சங்கீதா. நேற்று, சக்திவேல் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.
அப்போது, வீட்டு 'பிரிஜ்'ஜில் இருந்து, திடீரென மின்கசிவு ஏற்பட்டு, தீப்பொறி பரவி, அருகே இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தீயை அணைக்க முயற்சி செய்தனர். அணைக்க முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.