/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஹார்டுவேர்ஸ் கடையில் தீ பொருட்கள் எரிந்து நாசம்
/
ஹார்டுவேர்ஸ் கடையில் தீ பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : மே 24, 2025 11:39 PM

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பட்டுநுால்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரூபன், 30, இவர், அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
கடை விரிவுபடுத்தும் பணிக்கு, வெல்டிங் செய்யும் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, வெல்டிங் தீப்பொறிபட்டத்தில் தீப்பற்றியது. இதில், தீ வேகமாக பரவியதில், அப்பகுதியில் கரும் புகை சூழ்ந்தது.
அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும், ஒயர்கள், மின்சாதனப்பொருட்கள், பிளாஸ்டிக் பைப்கள், பெயிண்ட் டப்பாக்கள், மரப்பலகைகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இந்த தீ விபத்து குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.