ADDED : ஆக 20, 2025 10:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:-உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
உத்திரமேரூரில் உள்ள புக்கத்துறை நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல் பாரி ஆய்வு மேற்கொண்டார்.
அதில், தீ விபத்துக்கான பதிவேடுகள், விபத்தில் சிக்கி மீட்கப்பட்டோரின் விபரம், தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டாசு கடைகளின் விபரங்களை கேட்டறிந்தார். பின், தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், நிலைய அலுவலர் ஜெகதீசன், வீரர்கள் பங்கேற்றனர்.