தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தீயணைப்பு நிலையங்களில் காவலாளிகளுக்கு நாளை பயிற்சி

 தீயணைப்பு நிலையங்களில் காவலாளிகளுக்கு நாளை பயிற்சி

 தீயணைப்பு நிலையங்களில் காவலாளிகளுக்கு நாளை பயிற்சி


ADDED : பிப் 08, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களில், தனியார் நிறுவன பாதுகாப்பு காவலாளிகளுக்கு, அடிப்படை தீயணைப்பு குறித்த இலவச பயிற்சி முகாம், நாளை நடைபெறுகிறது.

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் உத்தரவுப்படி, தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள்.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணி புரிந்து வரும் காவலாளி களுக்கு, அடிப்படை தீயணைப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுகோட்டை சிப்காட், ஒரகடம், படப்பை ஆகிய 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களில், நாளை காலை 10:30 மணி முதல், மதியம் 1:00 மணி வரை இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தீத்தடுப்பு உபகரணங்கள் மூலம் எவ்வாறு தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது உள்ளிட்ட அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு காவலாளிகள், தங்களது எல்லைக்கு உட்பட்ட தீயணைப்பு நிலையங்களில், இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயன் பெருமாறு காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us