/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய் தீயணைப்பு துறையினர் மீட்பு
/
பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய் தீயணைப்பு துறையினர் மீட்பு
பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய் தீயணைப்பு துறையினர் மீட்பு
பாழடைந்த கிணற்றில் விழுந்த நாய் தீயணைப்பு துறையினர் மீட்பு
ADDED : ஏப் 18, 2025 01:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமராஜர் வீதி பின்புறம் உள்ள சேக்குபேட்டை பகுதியில், காலிமனையில், பயன்பாட்டில் இல்லாத, 50 ஆடி ஆழம் கொண்ட, தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணறு ஒன்று சுற்றுச்சுவர் இல்லாமல், தரைமட்டத்தில் உள்ளது.
நேற்று, மாலை 3:30 மணியளவில், அப்பகுதியில் உணவுக்காக சுற்றித்திரிந்த நாய் ஒன்று, கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், தவறி விழுந்து விட்டது. வெளியேற முடியாமல் நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. நாயின் சத்தம் கேட்டு அப்பகுதியினர், மாலை 3:40 மணிக்கு, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், 3:45 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பாழடைந்த கிணற்றுக்குள் மரக்குச்சி, குப்பை குவியல் மீது விழுந்து கிடந்த நாயை, தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி, கயிறு மற்றும் பக்கெட் வாயிலாக காயமின்றி உயிருடன் மீட்டு வெளியே விட்டனர்.
இதையடுத்து, பதற்றத்தில் இருந்த நாய், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக வாலை ஆட்டியபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.