/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சங்கரா பல்கலையில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
/
சங்கரா பல்கலையில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 19, 2025 10:27 PM
ஏனாத்துார்:காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில், பொறியியல் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறை படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.
இதில், சேர்க்கை குழு தலைவர் வெங்கட்ராமன் வரவேற்றார்.
துணைவேந்தர் சீனிவாசு, சார்பு துணைவேந்தர் வசந்த் மேத்தா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். காஞ்சி காமகோடி பீட சாரிட்டபிள் டிரஸ்ட் செயலர் சுரேஷ் குருமணி வாழ்த்துரை வழங்கினார்.
சேர்க்கை குழு துணை தலைவர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.