/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீன் கழிவால் பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

ADDED : மே 23, 2025 02:02 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாநகராட்சி கட்டடத்தில் மீன் மற்றும் இறைச்சி அங்காடி கட்டடம் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகளில், மீன் மற்றும் இறைச்சியை சுத்தப்படுத்தும்போது வீணாகும் கழிவுநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், மீன் அங்காடியில் இருந்து, பாதாள சாக்கடை இணைப்பு, 'மேன்ஹோலில்' அடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலையில் மீன் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
மீன் சந்தை பாதாள சாக்கடை இணைப்பில் இருந்து அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மீன் சந்தை மற்றும் இறைச்சி அங்காடியில் இருந்து மீன் கழிவுநீரை மட்டும் வெளியேற்றாமல், மீன்களை வெட்டும்போது வீணாகும் கழிவை வெளியேற்றுவதால் அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.