ADDED : பிப் 26, 2024 04:55 AM
அ நிறம் | அளவு
சூணாம்பேடு : சூணாம்பேடு அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் 50. மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, மீன் பிடிக்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். காலை வரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த உறவினர்கள் சுற்றுவட்டாரப் பகுதியில் சங்கரைத் தேடினர்.
ஆலம்பரைக்குப்பம் பகுதியில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில், சங்கர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்ட கிராமத்தினர், சூணாம்பேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற சூணாம்பேடு போலீசார், வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
