ADDED : ஜன 28, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், லாட்ஜில் மூணு சீட்டு விளையாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பிளாட்டினம் லாட்ஜில், நேற்று முன்தினம் மாலை மர்ம நபர்கள் சிலர், மூணு சீட்டு விளையாடுவதாக ஸ்ரீபெரும் புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மது போதையில் இருந்த ஐந்து பேர், மூணு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த செல்வம், 41, சதீஷ், 30, ஜெகதீஸ்வரன், 31, சரத்குமார், 32, ராமராஜ், 36, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
