ADDED : டிச 03, 2024 07:37 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தில் பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்த, இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள பெட்டி கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், விமல், கூல்லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, 6 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கமலகந்த நாயக், 26, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மாம்பாக்கம் கிராமம், நடு தெருவை சேர்ந்த ராஜேஷ், 39, கீவளூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த கார்த்தி, 37, வடமங்கலம் கிராமம், கம்பர் தெருவை சேர்ந்த உஷா, 42, வடமங்கலம் என்.எஸ்.கே., தெருவை சேர்ந்த மல்லிகா என, ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ குட்காவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.