/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாங்கண்ணி சர்ச்சில் வரும் 5ல் கொடியேற்றம்
/
வேளாங்கண்ணி சர்ச்சில் வரும் 5ல் கொடியேற்றம்
ADDED : செப் 03, 2025 01:57 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வேளாங்கண்ணி சர்ச்சில், நாளை மறுதினம், கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், வேளாங்கண்ணி சர்ச் உள்ளது.
இந்த சர்ச்சில், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், ஈஸ்டர் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த சர்ச்சின் 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, தேர் விழா, நாளை மறு தினம், துவங்க உள்ளது.
அதில், வரும் வெள்ளிக்கிழமை, மாலை 6:30 மணிக்கு, கொடியேற்றம் நடக்க உள்ளது.
சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நற் கருணை பெருவிழா சிறப்பு ஆராதனை நடக்க உள்ளது.
பின், ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு, தேர் திருவிழா நடக்க உள்ளது.