/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
/
விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
ADDED : டிச 08, 2024 01:53 AM

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும் கம்பன் கால்வாய், 44 கி.மீ., துாரம் செல்கிறது.
இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களின், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து, ஒழுக்கோல்பட்டு, மேல் வேண்பாக்கம், கீழ்வேண்பாக்கம், திருமால்பூர், பள்ளூர், புள்ளலுார், புரிசை, தக்கோலம், பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக கூவம் ஆற்றில் கலக்கிறது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், கம்பன் கால்வாய் மற்றும் மக்ளின் கால்வாய் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், விருதசீர நதியில் தண்ணீர் செல்கிறது.
இதன் வாயிலாக, ஒழுக்கோல்பட்டு, கீழ்வெண்பாக்கம், திருமால்பூர், பள்ளூர், புள்ளலுாரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.