/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
/
முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
ADDED : ஜூன் 01, 2025 12:13 AM

அய்யங்கார்குளம்,காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி அருகில் உள்ள மேல்நிலைப்பள்ளியில், கடந்த 2,000ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயின்ற மாணவ, மாணவியர் 200 பேர் வாட்ஸ் ஆப் குழு வாயிலாக ஒன்றிணைந்தனர்.
இம்மாணவ-மாணவியரின் சந்திப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் என அனைவரும் வரவழைத்து கவுரவித்தனர்.
தாங்கள் பள்ளியில் பயின்றபோது நடந்த சுவாரசியமான சம்பங்களையும், பாடம் நடத்திய ஆசிரியர்களின் திறமையையும் நினைவு கூர்ந்தனர். பள்ளிக்கு மின்விசிறி, டேபிள், சேர் உள்ளிட்டவற்றை என நினைவு பரிசாக வழங்கினர். சந்திப்பின் நினைவாக அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.