/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று கால்வாய் இணைப்பாக களியப்பேட்டை பாலத்திற்கு அடிக்கல்
/
பாலாற்று கால்வாய் இணைப்பாக களியப்பேட்டை பாலத்திற்கு அடிக்கல்
பாலாற்று கால்வாய் இணைப்பாக களியப்பேட்டை பாலத்திற்கு அடிக்கல்
பாலாற்று கால்வாய் இணைப்பாக களியப்பேட்டை பாலத்திற்கு அடிக்கல்
ADDED : பிப் 08, 2024 12:33 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களியப்பேட்டை கிராமம். இக்கிராமத்திற்கான மயானம், களியப்பேட்டை பாலாற்றங்கரை மீது உள்ளது.
களியப்பேட்டை பாலாற்றில் இருந்து, மெய்யூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை கடந்து இப்பகுதி மயானத்திற்கு செல்லும் நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பருவமழை காலத்தில், இக்கால்வாயில் வெள்ளம் புரண்டோடும் போது, கால்வாயை கடந்து சென்று உயிர் நீத்தோர் சடலங்களை அடக்கம் செய்வதில் அப்பகுதியினர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனால், களியப்பேட்டை மயானத்திற்கு செல்லும் பாலாற்று கால்வாய் இணைப்பாக பாலம் அமைக்க வேண்டும் என கோரி வந்தனர்.
அதன்படி, கால்வாய் இணைப்பாக புதிய பாலம் கட்ட மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.முக., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் பிருந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

